/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை கல்லுாரியில் பாரதியார் தின விழா கீழக்கரை கல்லுாரியில் பாரதியார் தின விழா

ADDED : டிச 27, 2025 05:33 AM
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய மக்கள் கவி பாரதியார் தின விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான கவிஞர்
நா.முத்துநிலவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாரதி யார், என்ற தலைப்பில் பாரதியைப் பற்றி அரிய கருத்துக்களை பல்வேறு சான்றுகளுடன் விளக்கி கூறினார்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் வான்தமிழ் இளம் பரிதி, செயலர் ராஜ கலைஞன் விஜயராம், ஆங்கிலத் துறை பேராசிரியர் சுலைமான் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
மாணவர்களுக்கு கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் டிபேட் கிளப் பார்லே ஜீனியஸ் இன் ஒருங்கிணைப்பாளர் மரகதம், துணை ஒருங்கிணைப்பாளர் முகமது பாசிஹ் ஆகியோர் செய்திருந்தனர்.
துணை முதல்வர் பெரோஸ்கான், ஆங்கிலத் துறை தலைவர் செல்வகுமார், நுாலகர் பால்ராஜ், ராஜதிவாகர், முகமது ஜகுபர் அலி உட்பட ஏராளமான பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.