/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ரூ.3 கோடியில் கட்டுவதற்கு பூமி பூஜை
/
இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ரூ.3 கோடியில் கட்டுவதற்கு பூமி பூஜை
இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ரூ.3 கோடியில் கட்டுவதற்கு பூமி பூஜை
இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ரூ.3 கோடியில் கட்டுவதற்கு பூமி பூஜை
ADDED : பிப் 17, 2024 04:46 AM

பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் உருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 கோடியில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் பரமக்குடி சந்தை திடலில் இடம் ஒதுக்கப்பட்டது. நேற்று பூமி பூஜை நடந்தது. அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கயல்விழி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.
நவாஸ்கனி எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ.,க்கள் காதர்பாட்ஷா, முருகேசன், கருமாணிக்கம், தமிழரசி, ராஜா, பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, கமிஷனர் (பொ) கண்ணன், தேவேந்திரர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள், இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி கலந்து கொண்டனர்.