/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் பாசன மடைகள்; ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
பெரிய கண்மாய் பாசன மடைகள்; ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பெரிய கண்மாய் பாசன மடைகள்; ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பெரிய கண்மாய் பாசன மடைகள்; ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2025 10:40 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் கீழ் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு கண்மாய் நீர் கொண்டு செல்லும் வகையில் 20 பாசன மடைகள் அமைந்துள்ன. இந்த பாசன மடைகள் மூலம் விவசாயிகள் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று பயனடைகின்றனர்.
இந்நிலையில் பாசன மடைகளுக்கு விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில் கண்மாய் கரை வழியாக சில ஆண்டுகளுக்கு முன்பு கிராவல் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலை முறையாக பராமரிப்பின்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால், விவசாயிகள் பாசன மடைகளுக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலம் துவங்கும் முன் பாசனமடைகளுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.