/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
/
பெரிய கண்மாய் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 04:08 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் 2வது பெரிய கண்மாய், நாரை தொடர்ச்சியாக பறக்க முடியாத 48 குருச்சிகளைக் (கிராமங்கள்) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது, ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்தக் கண்மாயில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. கி.மீ., ஒரு மடைவீதம் 20 பாசன மடைகள் அமைந்துள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாய் முறையாக பராமரிப்பு செய்யப்படாததன் காரணமாக, கண்மாயின் உட்பகுதிகள் கருவேல மரங்கள் சூழ்ந்து மண் மேடாகி வருகின்றன. இதனால் மழைக்காலங்களில் போதிய தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கண்மாயில் தண்ணீர் வற்றியுள்ள நிலையிலும், மழைக்காலம் துவங்கும் முன்பாகவும் கண்மாயில் உள்ள கருவேல மர புதர்களை அகற்றி மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.

