/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலச்செல்வனுார் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை அதிகரிப்பு
/
மேலச்செல்வனுார் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை அதிகரிப்பு
மேலச்செல்வனுார் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை அதிகரிப்பு
மேலச்செல்வனுார் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை அதிகரிப்பு
ADDED : ஜன 20, 2025 05:12 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் சரணாலயத்திற்கு தற்போது பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
மேலச்செல்வனுார் கண்மாய் பகுதி பறவைகள் சரணாலயமாக 1995இல் அறிவிக்கப்பட்டது.
அக்., நவ., டிச., மாதங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பறவைகள் இங்கு உள்ள மேலச்செல்வனுார் கண்மாயில் உள்ள உடைமரக்காடுகளில் தங்கி இருந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து பிப்., மற்றும் மார்ச் மாத இறுதிக்குள் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாகும்.
கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: கண்மாயில் பறவைகளுக்காக ரக உள்ளூர் மீன்கள் விடப்படுகின்றன. ரோகு, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட சிறிய ரக மீன்களை விரும்பி பறவைகள் உண்கின்றன.
தற்போது மஞ்சள் மூக்கன், கூழைக்கடா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, குச்சி கால் நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், ஜொலிக்கும் மூக்கன் உள்ளிட்ட வெளிநாடு இனங்களைச் சேர்ந்த பறவைகள் வருகை தந்துள்ளன. தின் நுழைவாயில் அருகே 30 மீ., உயரம் கொண்ட பார்வையாளர் மாடத்தில் பைனாகுலர் உதவியுடன் சுற்றுலா பயணிகள் 500 மீ., தொலைவிற்கு பறவைகளை பார்த்து ரசிக்கின்றனர்.
இங்குள்ள கிராம பொதுமக்கள் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் அரிய வகை பறவை இனங்களுக்கு இடையூறின்றி, பட்டாசு கொளுத்தாமலும், வெடிச்சத்தம் இன்றி ஒத்துழைப்பு தருகின்றனர்.பிப்., மாத வாக்கில் பறவைகளுக்கான கணக்கெடுப்புகள் நடக்க உள்ளது என்றார்.
மாவட்ட வனச்சரக அலுவலர் முருகன் மற்றும் வனவர் ராஜேஷ் குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் களப்பணியில் உள்ளனர்.