/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வயல்களில் எலிகளை பிடிக்க பறவை மேடை அமைப்பு
/
வயல்களில் எலிகளை பிடிக்க பறவை மேடை அமைப்பு
ADDED : ஜன 11, 2026 05:17 AM

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே களக்குடி, நல்லாங்குடி, பனைக்குளம், எக்ககுடி, வித்தானுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் வயல்களில் எலிகளை பிடிப்பதற்கு பறவை மேடை என்ற நவீன யுக்தியை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் நெல்மணிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் விளையக்கூடிய நெல்மணிகளை சேதப்படுத்தும் வகையில் ஏராளமான எலிகள் வயில்களில் உள்ளன.
இவற்றை தடுப்பதற்காக வயல்வெளிகளில் மூன்றடி உயரத்திற்கு வைக்கோலால் சுற்றப்பட்ட குச்சி ஊன்றப்பட்டு பறவைகள் வந்து அமரும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், இதுபோன்ற பறவை மேடைகளால் விவசாயிகளுக்கு தொல்லை தரக்கூடிய எலிகளை வேட்டையாடக் கூடிய பறவைகள் நெல் வயல்களின் நடுவே அமர்ந்து அவற்றை கண்காணித்து இரையாக எடுத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
பெரும்பாலான எலித் தொல்லைகளுக்கு இது பயனுள்ளதாக அமைகிறது என்றனர்.

