/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடைகளுடன் சேர்ந்து இரை தேடும் பறவைகள்
/
கால்நடைகளுடன் சேர்ந்து இரை தேடும் பறவைகள்
ADDED : ஏப் 21, 2025 05:40 AM

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் முடிந்து விட்டதால் கால்நடைகள், பறவைகள் இரை தேடும் இடமாக வயல்வெளிகள் மாறிவிட்டது.
திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் முடிந்து விட்டதால் கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்களில் விட்டுள்ளனர்.
இந்த மாடுகள் தங்கள் உணவைத் தேடி அறுவடை முடிந்த வயல்களிலும், அருகிலுள்ள புல்வெளிகளிலும் சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
அவ்வாறு வயல் வெளிகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளைப் பின் தொடர்ந்து ஏராளமான கொக்குகள் செல்கின்றன.
மாடுகள் மேய்ச்சலுக்கு நடந்து செல்லும் போது புற்களுக்கு இடையே மறைந்திருக்கும் பூச்சிகள், புழுக்கள், வெட்டுக்கிளிகள், மற்றும் சிறு பறக்கும் பூச்சிகள் வெளியே வருகின்றன.
மாடுகளின் காலடி ஓசை மற்றும் அசைவுகளால் இந்தப் பூச்சிகள் வெளியேறுகின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கொக்குகள் மாடுகளைப் பின்தொடர்ந்து சென்று வெளிப்படும் இந்தப் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன.
வெள்ளை நிறக் கொக்குகள், சாம்பல் நிறக் கொக்குகள் எனப் பல வகையான கொக்குகள் இவ்வாறு மாடுகளைப் பின்தொடர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. இது இயற்கையின் ஒரு அற்புதமான கூட்டு வாழ்க்கைக்கு சிறந்த உதாரணமாகும்.
மாடுகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல், கொக்குகள் தங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்கின்றன. திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இக்காட்சியை காணலாம்.

