ADDED : செப் 27, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடந்தது.
மாநில பொது செய லாளர் பொன் பாலகணபதி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொது செயலாளர்கள் வழக்கறிஞர் சண்முக நாதன், குமார், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தனர்.
ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் மோகன், ஒ.பி.சி., அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, அமைப்புசாரா பிரிவு மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார், மாவட்ட அலுவலக செயலாளர் ராகேஷ்குமார் மற்றும் பா.ஜ., கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.