நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றியை கொண்டாடும் வகையில் கமுதி பஸ் ஸ்டாண்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் கணபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர்கள் பூபதிராஜா, அழகுமலை முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதே போல் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி பஸ் ஸ்டாண்டில் முதுகுளத்துார் கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். உடன் ஒன்றிய பிரதிநிதி முருகேசன், துணைத்தலைவர் கவிக்குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

