ADDED : ஆக 05, 2026 04:07 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பரமக்குடியை சேர்ந்த பா.ஜ., நிர்வாகியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் 50. பா.ஜ., மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளராக உள்ளார். சமீபத்தில் தன் முகநுால் பக்கத்தில் ஹிந்து முஸ்லிம் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
சைபர் கிரைம் சமூக வலைதளப்பிரிவு போலீஸ்காரர் கார்த்திக்குமார், சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்த போது முத்துலிங்கம் பதிவை பார்த்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் முத்துலிங்கத்தை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்த னர்.
