/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
/
பா.ஜ., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
ADDED : பிப் 18, 2026 07:38 AM
கமுதி: கமுதி கண்ணார்பட்டியில் வசிக்கும் பாலகணபதி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., துணைத்தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து டூவீலரில் சென்றார். அப்போது சார்பதிவாளர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர்.
படுகாயம் அடைந்த பாலகணபதி சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பாலகணபதிக்கும் இலுப்பைகுளம் முத்துமீராவுக்கும் இருந்த முன்விரோதத்தில் தாக்குதல் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிந்து இலுப்பைகுளம் முத்துமீரா 46, முத்து சூரியகுமார் 32, முத்துராமலிங்கம் 41, ஆதனகுறிச்சி கண்ணதாசன் 31, காணிக்கூர் ராஜேஷ் 31, சின்னமணக்குளம் லட்சுமணன் 44, மருதங்கநல்லுார் திருமுருகன் 48, ஆகியோரை கைது செய்தார்.

