ADDED : ஆக 15, 2026 11:44 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: -சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது.
மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் குமார், மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். குஜராத் மாநில எம்.எல்.ஏ., ஹிராபாய் சோலங்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அரண்மனை பகுதியில் துவங்கிய ஊர்வலம் வண்டிக்காரத் தெரு வழியாக வழிவிடு முருகன் கோயிலில் நிறைவடைந்தது.இதில் வட்டார, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நகர் தலைவர் மோகன் செய்திருந்தார்.
