/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண் எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்து தள்ளிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது
/
பெண் எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்து தள்ளிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது
பெண் எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்து தள்ளிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது
பெண் எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்து தள்ளிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : ஜன 03, 2025 11:42 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பெண் எஸ்.ஐ.,யின் சீருடையை பிடித்து இழுத்து கீழே தள்ளிய பா.ஜ., அரசு செய்தி தொடர்பாளர் சிவஞானபுரம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த சண்முகநாதனை 59, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் பா.ஜ., சார்பில் மகிளா மோர்ச்சாவின் உத்தேச நீதிக்கட்சி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு அண்ணா பல்கலையில் பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து ஊர்வலமாக செல்லயிருந்தனர். இதற்கு மதுரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் 8 பேர் கேணிக்கரை சந்திப்பு பகுதியில் ஊர்வலம் செல்ல முயன்றனர். கேணிக்கரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அங்கிருந்த பெண் போலீஸ் எஸ்.ஐ.,யை பா.ஜ., அரசு செய்தி தொடர்பாளர் சண்முகநாதன் தகராறு செய்து மானபங்கம் செய்யும் முயற்சியுடன் சீருடையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.
இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த அருள் எஸ்.ஐ., புகாரின்படி கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.