ADDED : ஆக 18, 2026 03:05 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாபுரத்தில் பா.ஜ., வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள காங்., அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட போது காங்., பார்லி., குழுத் தலைவர் சோனியா நிறுத்துமாறு சைகை காண்பித்ததாக சர்ச்சையானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் சண்முகநாதன், குமார் முன்னிலை வகித்தனர்.
இதில் மெழுகுவர்த்தி ஏந்தி சோனியாவுக்கு எதிராக கோஷமிட்டனர். நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துசாமி, சவுந்திரபாண்டியன், நாகேந்திரன் பங்கேற்றனர்.
