/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்
/
பா.ஜ., தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்
ADDED : ஆக 11, 2025 10:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றிய பா.ஜ., சார்பில் 79வது சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக திருப்புல்லாணி நகர் பகுதிகளில் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
திருப்புல்லாணி பா.ஜ., ஒன்றிய தலைவர் மங்களேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலையரசி முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய தலைவர் பிரபாகரன் வரவேற்றார். ஒன்றிய பொதுச் செயலாளர் விஸ்வநாதன், தேவராஜன் அலெக்ஸ், பொருளாளர் மதுரை வீரன் உட்பட ஏராளமான ஒன்றிய, நகர் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக பல்வேறு ஒன்றியப் பகுதிகளில் இதுபோன்று தேசியக்கொடி ஊர்வலம் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.