/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., மாநில தலைவர், ராமநாதபுரம் எம்.பி.,யை கண்டித்து பா.ஜ., போஸ்டர்

ADDED : ஜன 26, 2025 08:51 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் நவாஸ்கனி எம்.பி., மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை பிரச்னையில் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் புனிதத்தை கெடுத்து, மத கலவரத்தை துாண்ட திட்டமா? என கேள்வி எழுப்பி, மக்கள் பிரச்னையை பேசாமல் மக்களின் நம்பிக்கையும், உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக செயல்படும் நவாஸ்கனி பதவி விலக வேண்டும் என, போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக காங்., கட்சித்தலைவர் செல்வபெருந்தகை கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது ராஜதந்திரம் என்ற கருத்துக்கு ராஜதந்திரமா, வெட்கக்கேடா? இந்திய பகுதியை இலங்கைக்கு தாரைவார்த்து ஆயிரக்கணக்கான மீனவர்களை கொன்றும், வாழ்வாதாரத்தையும், தொழிலையும் நசுக்கி நாசம் செய்த காங்., கட்சியே இது தான் ராஜதந்திரமா என கேள்வி எழுப்பி போஸ்டர் ராமநாதபுரம் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.