ADDED : நவ 21, 2025 05:02 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் அரண்மனை அருகே ராமேஸ்வரம் பள்ளி மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை, பாலியல் கொடுமைகள், கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளது. தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷமிட்டனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் குமார், பொருளாளர் பரமேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் நிர்வாகிகள், மகளிரணியினர் பங்கேற்றனர்.
