ADDED : பிப் 19, 2026 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., வினர் ராமநாதபுரம் அரண்மனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட பட்டியல் அணி தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். பட்டியல், பழங்குடியினர் மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பழங்குடி மக்களின் நிதியை திருடி தி.மு.க., அரசு முறைகேடு செய்துள்ளது எனக் கோஷமிட்டனர். மாவட்ட பொதுச் செயலாளர்கள் வக்கீல் சண்முகநாதன், குமார், பட்டியல் அணி பொறுப்பாளர் பிரபு, முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பங்கேற்றனர்.

