/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2025 03:34 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் நகராட்சியின் அத்துமீறல், ஊழல், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் கட்டி டெண்டர் நடத்தியதில் முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., வினர் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் முரளிதரன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, மாவட்ட பொது செயலாளர்கள் வழக்கறிஞர் சண்முகநாதன், கவுன்சிலர் குமார்.
மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, முன்னாள் மாவட்டத்தலைவர் கதிரவன், மாவட்ட செயலாளர்கள் சங்கீதா, கலையரசி, ஜெயந்தி, மீனம்மாள், மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் நகராட்சி நிர்வாகத்தில் நடை பெறும் முறைகேடு, ஊழல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.--