/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயலில் தி.மு.க., அரசு உள்ளது பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
/
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயலில் தி.மு.க., அரசு உள்ளது பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயலில் தி.மு.க., அரசு உள்ளது பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயலில் தி.மு.க., அரசு உள்ளது பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 11, 2025 11:13 PM
ராமநாதபுரம்: மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தான் தி.மு.க., அரசு செய்து வருகிறது என பா.ஜ., கமாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி தெரிவித்தார்.
ராமநாதபுரம் கட்சி அலுவலகத்தில் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக 2014ல் பத்தாவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி இன்று உலகின் நான்காவதுஇடத்தை பெற்றுள்ளது. பிரதமரின் வீடு வழங்கும்திட்டத்தில் 4 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
ஜல் ஜீவன் திட்டத்தில்15 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 51 கோடி பேருக்கு ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 68 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. 2013 -14 முதல் 2024 -25ம் ஆண்டு வரை உணவு பதப்படுத்தும் திறன் 12 லட்சம் டன்னில் இருந்து 242 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதியானது ரூ.420 கோடியில் இருந்து ரூ.771 கோடியாக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6000 வீதம் ரூ. 3.7 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 1.75 லட்சம் கோடிக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுஉள்ளது.
விவசாயிகளுக்கான கடன் அட்டை மூலம் 7 கோடி விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேலான கடன் வழங்கப்பட்டுள்ளது. 2014ல் இருந்த 3 உணவு பூங்காக்கள் 2024 ல் 24 பூங்காங்களாக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு பாராளுமன்றம், சட்டசபைகளில் 33 சதவீதம் ஒதுக்கீட்டு சட்டம், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி, கோவிட் காலத்தில் 20 கோடி பெண்களுக்கு நேரடி பண உதவி, முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி பேருக்கு ரூ.32 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து நகரங்களில் இருந்த மெட்ரோ ரயில் 23 நகரங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தி.மு.க., அரசு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை கலைஞர் வீடு திட்டம், விபத்து காப்பீடு திட்டத்தை கலைஞர் காப்பீடு திட்டம், என மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகிறது, என அவர் தெரிவித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, பொருளாளர் பரமேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு சிவசங்கர், ஊடகப்பிரிவு தலைவர் குமரன் உட்பட நிர்வாகிகள் இருந்தனர்.