/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய்க்கு காப்பீட்டு தொகை வழங்க பா.ஜ., வலியுறுத்தல்
/
மிளகாய்க்கு காப்பீட்டு தொகை வழங்க பா.ஜ., வலியுறுத்தல்
மிளகாய்க்கு காப்பீட்டு தொகை வழங்க பா.ஜ., வலியுறுத்தல்
மிளகாய்க்கு காப்பீட்டு தொகை வழங்க பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 13, 2024 05:59 AM
ராமநாதபுரம் : கடலாடி தாலுகா எஸ்.தரைக்குடி குரூப் 16 கிராமங்களில் 2023-24ல் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் தரணி முருகேசன் தலைமையில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்துவல்லாயுதம் முன்னிலையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், எஸ். தரைக்குடி பிர்கா வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம், அன்னப்பூவநாயக்கன்பட்டி, கொண்டு நல்லான்பட்டி, கொக்கரசன் கோட்டை, செவல்பட்டி, வாலம்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் 2023-24 ல் மழை வெள்ளத்தில் மிளகாய் முற்றிலும் சேதமடைந்து விட்டது. எனவே அதற்குரிய காப்பீடு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.