ADDED : மார் 06, 2024 05:09 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் பா.ஜ., மகளிர் அணி சார்பில் நலத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்நடந்தது.
புது பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்த ஊர்வலத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் லட்சுமிதேவி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார்.
மகளிரணி மாநில பொதுச் செயலாளர் கவிதா, மாநில துணைத் தலைவி கலாராணி, மாவட்ட மகளிரணி பார்வையாளர் பிரியா.
மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர்கள் மணிமேகலை, சத்தியப்பிரியா, பொருளாளர் ஐஸ்வர்யா, பா.ஜ., நகர் தலைவர் கார்த்திகேயன், மகளிரணி தலைவி லோகேஷ்வரி, மாவட்ட செயலாளர் கலையரசி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது.-------
