/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., பயிலரங்கம் பூத் கமிட்டி மாநாடு
/
பா.ஜ., பயிலரங்கம் பூத் கமிட்டி மாநாடு
ADDED : ஜன 01, 2026 05:22 AM
கடலாடி: -கடலாடி தேவர் திருமண மஹாலில் முதுகுளத்துார் சட்டசபை பா.ஜ., நிர்வாகிகளுக்கு பயிலரங்கம் மற்றும் பூத் கமிட்டி மாநாடு நடந்தது.
சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் பா.ஜ., மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு எஸ்.ஐ.ஆர்., சிறப்பு திருத்த பயிலரங்கம் நடந்தது.
முதுகுளத்துார் தொகுதி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் குப்புராம், சுரேஷ்குமார், ஆத்மா கார்த்திக் முன்னிலை வகித்தனர். 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., நிர்வாகிகள் களப்பணி ஆற்ற வேண்டும்.
கிராமங்கள் தோறும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
இணை அமைப்பாளர் ரமேஷ் பாபு வரவேற்றார். கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் முருகன் நன்றி கூறினார்.

