ராமேஸ்வரம் கடற்கரையில் கரும் புகை: பக்தர்கள் பீதி
ராமேஸ்வரம் கடற்கரையில் கரும் புகை: பக்தர்கள் பீதி
ADDED : ஏப் 26, 2026 03:19 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை போதை ஆசாமிகள் எரித்ததால் அப்பகுதி புகைமண்டலமாக மாறியது. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
ராமேஸ்வரம் நகரில் சேகரிக்கப்படும் குப்பை அக்னி தீர்த்த கடற்கரையோரம் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி கண்டுகொள்ளவில்லை. கடற்கரையில் இரவு நேரம் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதால் அங்கு குடிமகன்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் அங்கு கிடந்த பைபர் சீட், பிளாஸ்டிக் கழிவுகளை போதை ஆசாமிகள் தீ வைத்து எரித்தனர். தீ மளமளவென பரவி அக்னி தீர்த்த கடற்கரை முழுவதும் கரும்புகை பரவியது. இதனால் கடலில் புனித நீராடிய பக்தர்கள் பீதியடைந்தனர். நகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் தீயை அணைத்தனர்.
