/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி பகுதியில் வாழை மரங்களில் குலை நோய்: விவசாயிகள் கவலை
/
கமுதி பகுதியில் வாழை மரங்களில் குலை நோய்: விவசாயிகள் கவலை
கமுதி பகுதியில் வாழை மரங்களில் குலை நோய்: விவசாயிகள் கவலை
கமுதி பகுதியில் வாழை மரங்களில் குலை நோய்: விவசாயிகள் கவலை
ADDED : அக் 24, 2024 04:58 AM

கமுதி: கமுதி பகுதியில் சாகுபடி செய்துள்ள வாழை மரங்களில் குலை நோய் தாக்கத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி அருகே நெல், மிளகாய் பிரதான தொழிலாக உள்ளது. அதன் பிறகு கமுதி அருகே கிளாமரம், கோரைப்பள்ளம், கீழராமநதி, மேல ராமநதி, நீராவி, காவடிபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200 ஏக்கருக்கும் அதிகமான அளவில் வாழை விவசாயம் செய்கின்றனர்.
இப்பகுதியில் போர்வெல் தண்ணீரைப் பாய்ச்சுகின்றனர். தற்போது கடந்த சில நாட்களாகவே வாழை மரங்களில் குலை நோய் தாக்கம் ஏற்பட்டு ஏராளமான வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோரைப்பள்ளம் இயற்கை விவசாயி ராமர் கூறியதாவது:
கமுதி வட்டாரத்தில் கோரைப்பள்ளம், கிளாம்பரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமானோர் வாழை விவசாயம் செய்கின்றனர். இங்கு நாட்டு வாழை உட்பட பல்வேறு ரகங்கள் 12 மாதம் 18 மாதம் வளரும் பருவத்தில் உள்ளது. வாழை விவசாயத்திற்கு போர்வெல் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாழை மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வந்தது. தற்போது வாழை மரத்தில் குலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நன்கு செழித்து வளர்ந்துள்ள குலை தள்ளிய நிலையில் நோய் தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மரங்களையும் பாதிக்கிறது.
நாட்டு வாழை ரகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏராளமானோர் இந்த ஆண்டு வாழை சாகுபடியை கைவிட்டுள்ளனர். இதே போன்று தொடர்ந்து ஏற்பட்டால் வாழை விவசாயத்தில் நஷ்டம் மட்டுமே மிஞ்சும்.
ஒரு சில விவசாயிகள் நோயை தடுப்பதற்காக கூடுதல் பணம் செலவழித்து ஊசி செலுத்தி வருகின்றனர். எனவே இப்பகுதியில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மருந்துகள் அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.