/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அக்.24 சென்னையில் முற்றுகை போராட்டம்
/
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அக்.24 சென்னையில் முற்றுகை போராட்டம்
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அக்.24 சென்னையில் முற்றுகை போராட்டம்
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அக்.24 சென்னையில் முற்றுகை போராட்டம்
ADDED : அக் 06, 2024 01:45 AM
ராமநாதபுரம்: அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்த நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் அமைப்பினர் சென்னையில் ஓய்வூதியர் பொறுப்பாட்சியர் அலுவலகத்தில் அக்., 24 முற்றுகையில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் 95 ஆயிரம் பேர் உள்ளனர். 5000 பேர் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கோவை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. தொழிலாளர்களுக்கு எதிரான அரசின் அனைத்து மேல் முறையீட்டு வழக்குகளும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அகவிலைப்படி உயர்வு வழங்காமல் அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றன.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி ஓய்வு பெற்றோர் அமைப்பினர் அக்.,24 சென்னை ஓய்வூதியர் பொறுப்பாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தவுள்ளனர்.
ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டல துணை செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது: ஓய்வு போக்குவரத்து தொழிலாளருக்கு 105 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். 2022 டிச., முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.
இது குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை அமல்படுத்தாமல் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது கண்டிக்கதக்கது. நீதிமன்ற தீர்ப்புகளை அமல் படுத்த வேண்டும் என்றார்.