ADDED : செப் 25, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்,: முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் யூத் ரெட் கிராஸ், என்.எஸ்.எஸ்., ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரி செயலர் எட்வர்டு பிரான்சிஸ் தலைமை வகித்தார். முதல்வர் சூசை நாதன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சதீஷ்குமார், மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ரமேஷ் குணசேகரன் ரத்ததானம் குறித்து விளக்கி கூறினர். யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சத்திய சுகம் வரவேற்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் பங்கெடுத்து மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன் நாகன் பங்கேற்றனர்.