ADDED : அக் 18, 2024 05:01 AM

ராமநாதபுரம்: செய்யது அம்மாள் கலை - அறிவியல் கல்லுாரியில் நாட்டுநலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் ஜன்னத்துல் ஜாஸ்மின், மருத்துவ ஆய்வாளர் நம்புசீனிவாசன், ஐ.சி.டி.சி., ஆலோசகர் பாலமுருகன், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் வீரபெருமாள் ஆகியோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்தான வங்கி டாக்டர்கள் ரத்தம் சேகரித்தனர்.
கல்லுாரி தாளாளர் அ.செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் ஆகியோர் ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வள்ளி விநாயகம், செல்வக்குமார், சக்திவேல், அருணாதேவி, எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர் மனோஜ்குமார், கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.