நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமீதியா கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு மாவட்ட யூத் ரெட் கிராஸ் மற்றும் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரி இயக்குனர் ஹபீப் முகம்மது தலைமை வகித்தார். முதல்வர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், ரெட் கிராஸ் மலைக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ரத்த சேகரிப்பு குழுவினர் 80 மாணவர்களிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.