ADDED : ஏப் 28, 2025 05:32 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில். ரத்த தான முகாம் நடந்தது. முகாமிற்கு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ரியாஸ்கான் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் அல்பார், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் மணிமொழி உட்பட தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
