நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை அறி வியல் மகளிர் கல்லுாரியில் தாளாளர் வேலு மனோ கரன், செயலாளர் சகுந்தலா தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது.
முதல்வர் ரஜனி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் தீபிகா தலைமையிலான மருத்துவ குழு வினர் முகாமை நடத்தினர்.
இதில் ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை ஆர்.ஆர்.சி., ஒருங் கிணைப்பாளர் பொற்கொடி, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி செய்தனர்.