நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி: பெருநாழி அருகே உச்சிநத்தம் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 11ம் ஆண்டு ரத்ததான முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார். உச்சிநத்தம் ஊராட்சி செயலர் செம்பையா முன்னிலை வகித்தார். கிராமத் தலைவர் நாராயணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ராமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டிகளை சத்யராஜ் துவக்கி வைத்தார்.
பள்ளி செயலாளர் காசி முத்து வீரபாண்டியன் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறை கணபதி சுப்ர மணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

