ADDED : பிப் 03, 2026 06:36 AM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை மற்றும் க்ரசன்ட் ரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். ஏராளமான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
