ADDED : ஆக 31, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே சோமநாதபுரம் ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஸ்ரீ முத்தாலம்மன் கலை அறிவியல் பெண்கள் கல்லுாரி மற்றும் பாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.
கல்லுாரி சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி, சமூக ஆர்வலர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் வீரரவீந்திரகுமார் வரவேற்றார். உதவி பேராசிரியை மணிமொழி முகாமை துவக்கினார். டாக்டர் சுகந்திமதிவதினி வாழ்த்தினார். தலைமை சுகாதார ஆய்வாளர்கள் செந்துார்கண்ணா, முகிலன் ஏற்பாடுகளை செய்தனர். என்.எஸ்.எஸ்., கிட்ட அலுவலர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்
