ADDED : ஆக 31, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. தாளாளர் வேலுமனோகரன் தலைமை வகித்தார்.
செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி, முதல்வர் ரஜனி முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் மணிமொழி, செவிலியர்களால் மாணவிகளிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மலர்விழி, ஆர்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் யோகதர்ஷினி ஏற்பாடுகளை செய்தனர்.––
