ADDED : செப் 24, 2026 01:04 AM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடந்தது. இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை வரவேற்றார். முதல்வர் சுமையா முகாமை துவக்கி வைத்தார்.
செஞ்சிலுவை சங்கத் தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன், அமைப்பாளர் உலகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 54 மாணவிகள் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவூத்கான் செய்திருந்தார்.
