/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
த.மு.மு.க., விற்கு ரத்த கொடையாளர் விருது
/
த.மு.மு.க., விற்கு ரத்த கொடையாளர் விருது
ADDED : ஜன 24, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த கொடை வழங்கியதற்காக த.மு.மு.க., விற்கு விருது வழங்கப்பட்டது.
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் செந்தில்குமார் தலைமையில் நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், கண்காணிப்பாளர் மலர்வண்ணன் ஆகியோர் முன்னிலையில் த.மு.மு.க., மருத்துவ சேவை அணிக்கு ரத்த கொடை வழங்கியற்காக விருது, சான்றிதழ் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முகமது தமீம், ம.ம.க., நகர செயலாளர் அக்பர் ஆகியோர் பங்கேற்றனர்.

