/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் புளுடூத் முறையால் அளவீட்டில் குளறுபடி
/
ரேஷன் கடைகளில் புளுடூத் முறையால் அளவீட்டில் குளறுபடி
ரேஷன் கடைகளில் புளுடூத் முறையால் அளவீட்டில் குளறுபடி
ரேஷன் கடைகளில் புளுடூத் முறையால் அளவீட்டில் குளறுபடி
ADDED : அக் 07, 2025 03:48 AM

ராமநாதபுரம்: ரேஷன் கடைகளில் புளுடூத்முறையால் அளவீட்டில் குளறுபடியை கண்டித்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குஞ்சரபாண்டியன், கவுரவத் தலைவர் முத்துராமலிங்கம், கவுரவ செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
இதில், ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் அளவை உறுதி செய்ய புளுடூத் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மொத்த கிடங்கில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களை கடையில் இறக்குமதி செய்யும் முன்பு புளுடூத் மூலம் கணக்கிடுவதில்லை.
ஒரு மூட்டையில் 50 கிலோ அரிசி இருக்க வேண்டும்.
ஆனால் வரும் வழியில் அரிசி வீணாவது உள்ளிட்ட காரணங்களால் ஓரிரு கிலோ குறைவாக உள்ளது.
இதனால் பொருட்கள் வினியோகத்தில் குளறுபடி ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும்.
புதிய ஊதிய ஒப்பந்தத்தின் படி 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை நிரத்தரமாக்க வேண்டும்.
பெண்கள் அதிக அளவில் பணிபுரிவதால் அனைத்து அலுவலகங்களிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இன்று முதல் (அக்.7) தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் நடக்கிறது. மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தன், முருகேசன், இணைச் செயலாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன் பங்கேற்றனர்.