/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எம்.எஸ்.,தொழிலாளர் சட்டத்தொகுப்பு விழிப்புணர்வு
/
பி.எம்.எஸ்.,தொழிலாளர் சட்டத்தொகுப்பு விழிப்புணர்வு
பி.எம்.எஸ்.,தொழிலாளர் சட்டத்தொகுப்பு விழிப்புணர்வு
பி.எம்.எஸ்.,தொழிலாளர் சட்டத்தொகுப்பு விழிப்புணர்வு
ADDED : டிச 29, 2025 06:58 AM

பரமக்குடி: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பி.எம்.எஸ்., ஆம்புலன்ஸ் 108 தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மலைராஜ் தலைமை வகித்தார். பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மோகன்ராம், கைத்தறி சங்க மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். தமிழக பாரதிய கைத்தறி பேரவை பொருளாளர் காசி விஸ்வநாதன் வரவேற்றார். பி.எம்.எஸ்., மாநில பொதுச் செயலாளர் சங்கர், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்து பேசினார். ஒரு வருடம் பணி புரிந்தாலே தொழிலாளர்கள் கிராஜுவிட்டி பெற தகுதி பெறுகிறார்கள். அதிக நேர வேலைக்கு ஏற்ப ஊதியம், பெண்கள் இரவு நேரத்திலும் பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் நிர்வாகம் ஆகிய இரண்டு தரப்பிற்கும் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் மேலும் காக்கப்படும் என்றார்.
மாவட்ட செயலாளர் இளையராஜா, காரைக்குடி மண்டல போக்குவரத்து கழக தலைவர் மோகன், நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர். பி.எம்.எஸ்., துணைச்செயலாளர் ஜெய்குமார் நன்றி கூறினார்.

