/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பலத்த காற்றால் கவிழ்ந்தது படகு; கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு

ADDED : டிச 09, 2024 12:26 AM

திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பலத்த காற்றுக்கு படகு கவிழ்ந்தது. கடலில் விழுந்து தத்தளித்த 2 மீனவர்கள் மீட்கபட்டனர்.
தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் குணம் 45, சரத்குமார் 30. இருவரும் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு அப்பகுதி கடலில் நாட்டுபடகில் நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பலத்த காற்று வீசியது. இதில் படகு கவிழ்ந்தது.
மீனவர்கள் கடலில் விழுந்து படகை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்தனர். தொண்டி மரைன் எஸ்.ஐ. கதிரவன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, போலீசார் படகில் சென்று மற்ற மீனவர்கள் உதவியுடன் இரு மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
கவிழ்ந்த படகு மீட்கப்பட்டு கயிற்றால் கட்டி கரைக்கு கொண்டு வரபட்டது.