ADDED : மார் 21, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தில், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி கடல் வழி படகு பயணம் விரைவில் துவங்க உள்ளது.
இதற்காக அக்னி தீர்த்த கடற்கரையில் படகு தளம் அமைய உள்ளது. இதன் மதிப்பீடு 6.43 கோடி ரூபாய்.
இத்திட்டத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம், வில்லுாண்டி தீர்த்தம், தனுஷ்கோடி பகுதிக்கு கடல் வழியாக சுற்றுலா படகு சவாரி ஏற்படுத்தப்படுகிறது.
படகு தளம், 'டி' வடிவில் 120 மீ., நீளம், 7.5 மீ., அகலம், 6 அடி உயரத்தில் அமைய உள்ளது. ஏப்ரலில் பணி துவங்கும்.