/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
படகு பழுது நீக்கும் பணிகள் ராமேஸ்வரத்தில் மும்முரம்
/
படகு பழுது நீக்கும் பணிகள் ராமேஸ்வரத்தில் மும்முரம்
படகு பழுது நீக்கும் பணிகள் ராமேஸ்வரத்தில் மும்முரம்
படகு பழுது நீக்கும் பணிகள் ராமேஸ்வரத்தில் மும்முரம்
UPDATED : மே 29, 2025 04:16 AM
ADDED : மே 28, 2025 11:12 PM

ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் முடிய இன்னும் 17 நாட்களே உள்ளதால் ராமேஸ்வரத்தில் விசைப்படகில் பழுது நீக்கி புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்கா ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் 8000 படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் 17 நாட்கள் உள்ளது.இதையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் 600 க்கு மேற்பட்ட விசைப்படகில் பழுதான இன்ஜின், சேதமடைந்த மரப்பலகையை அகற்றி பச்சை வர்ணம் பூசி புதுப்புக்கும் பணியில் மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருபடகில் பராமரிப்பு பணி செய்து புதுப்பிக்க ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

