/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடை செய்யப்பட்டுள்ள வலையில் மீன் பிடித்த படகுகள் சிறைபிடிப்பு
/
தடை செய்யப்பட்டுள்ள வலையில் மீன் பிடித்த படகுகள் சிறைபிடிப்பு
தடை செய்யப்பட்டுள்ள வலையில் மீன் பிடித்த படகுகள் சிறைபிடிப்பு
தடை செய்யப்பட்டுள்ள வலையில் மீன் பிடித்த படகுகள் சிறைபிடிப்பு
ADDED : ஆக 04, 2025 04:03 AM
தொண்டி: தொண்டி அருகே தடை செய்யபட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த இருவிசைப்படகுகளை நாட்டுபடகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.
தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சோலியக்குடியை சேர்ந்த விசைபடகு மீனவர்கள் கரையோரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிப்பதை பார்த்தனர். இதில் இரு தரப்பு மீனவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து நாட்டுபடகு மீனவர்கள் இருவிசைபடகுகளை சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து தொண்டி மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நாட்டுபடகு மீனவர்கள் கூறுகையில், கரையோரங்களில் மீன்பிடிப்பது, இலுவை வலைகளை மீன்பிடிப்பது போன்ற செயல்களில் விசைபடகு மீனவர்கள் அடிக்கடி ஈடுபடுகின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது என்றனர்.