UPDATED : நவ 25, 2026 04:52 PM
ADDED : நவ 25, 2026 04:52 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உடற்கூறியல் துறை சார்பில் மருத்துவ கல்வி நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் செல்வாம்பிகை தலைமை வகித்தார். துறைத் தலைவர் லதா முன்னிலை வகித்தார். உடல் மற்றும் உறுப்பு தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனையில் உடல் தானம் வழங்குவோரை கவுரவிக்கும் வகையில் மரியாதைச் சுவர் திறக்கப்பட்டது.
உடல்தானம் வழங்கிய 6 பேரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். துணை முதல்வர் சுபிதா, மருத்துவக் கண்காணிப்பாளர் நுார் முகமது, பல்கலை மேற்பார்வையாளர் ஜவஹர் பரூக், மெழுகுவர்த்தி நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
