/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு
/
பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு
ADDED : ஆக 04, 2025 04:09 AM
பரமக்குடி: பரமக்குடியில் 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது.
பரமக்குடி மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 3ம் ஆண்டு புத்தகத்தில் உள்ள நடந்தது. தினமும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் நடந்தன.
தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி எழுதிய பேரலையின் சாட்சியம் என்ற நுால் வெளியிடப்பட்டது. புத்தகத் திருவிழா வரவேற்பு குழு தலைவர் சேகர் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் காளீஸ்வரன் புத்தகத்தை வெளியிட்டார். பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் பெற்றுக்கொண்டார். வரவேற்பு குழு செயலாளர் பசுமலை, துணைச் செயலாளர் ராஜா ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான நேற்று காலை புத்தகங்கள் வாசிப்பு மற்றும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் நடந்தது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. பொருளாளர் ராஜேந்திரன், வரவேற்பு குழு அப்துல் காதர், செந்தில் ராமு ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.