/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் போர்வெல் பயன்படுத்த முடியல: விவசாயி கவலை
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் போர்வெல் பயன்படுத்த முடியல: விவசாயி கவலை
டிரான்ஸ்பார்மர் பழுதால் போர்வெல் பயன்படுத்த முடியல: விவசாயி கவலை
டிரான்ஸ்பார்மர் பழுதால் போர்வெல் பயன்படுத்த முடியல: விவசாயி கவலை
ADDED : பிப் 11, 2025 04:52 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அரப்போது கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய போர்வெல் மோட்டார் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
அரப்போது கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு கடலாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது. கிராமத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு 100 கே.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பத்து நாட்களுக்கு மேலாகியும் விவசாயத்திற்கு போர்வெல் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால் 200 ஏக்கருக்கு மேல் மிளகாய் செடிகள் உள்ளிட்ட பயிர்கள் வாடுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை உள்ளது.
எனவே கடலாடி மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விரைவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.