/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு
/
ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு
ADDED : பிப் 09, 2025 05:00 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் மீட்கப்பட்டார்.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் எஸ்.ஐ., இளங்கோவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 12 வயது சிறுவன் முதலாவது நடைமேடையில் சந்தேகத்திற்கிடமாக திரிவதைக் கண்டு அவரிடம் விசாரித்தனர்.
அந்த சிறுவன் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வருபவர். தங்கியிருக்க பிடிக்காததால் விடுதியில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்திற்கு வந்தது தெரிய வந்தது.
அவர் திருச்சி அருகே லால்குடியை சேர்ந்தவர் என்றும் பெற்றோருடன் இருந்து படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து சைல்டு லைன் மூலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்படடார். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

