/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்; உணவுக்குழாயில் இறங்கியதால் தப்பினார்

ADDED : ஏப் 29, 2025 07:04 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே முதுகுளத்துாரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் 5 ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கினார். இந்த நாணயம் தொண்டை வழியாக உணவுக்குழாயில் இறங்கியதால் உயிர் தப்பினார்.
முதுகுளத்துாரை சேர்ந்த கோபி வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுதன்மூர்த்தி 12, முதுகுளத்துாரில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படிக்கிறார். ஒரிரு நாட்களுக்கு முன் இவர் வீட்டில் 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் நாணயத்தை தவறுதலாக விழுங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். நாணயம் தொண்டை பகுதியில் சிக்கியிருந்தது. பிறகு அந்த நாணயம் உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதிக்கு இறங்கியதால் உயிர் தப்பினார். இதையடுத்து டாக்டர்கள் இயற்கை உபாதையை கழிக்கும் போது நாணயம் வெளியே வந்துவிடும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை என கூறினர். அதன்படி நாணயம் வெளியேறியதையடுத்து சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.