ADDED : ஜூலை 07, 2026 11:11 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்யத் துாண்டிய அக்கா, தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜலீல் ரகுமான் 40. வீட்டருகே சிலர் கஞ்சா பயன்படுத்தி விட்டு பிரச்னை செய்கின்றனர் என திருப்பாலைக்குடி போலீசில் புகார் அளித்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிதனது 11 வயது மகள், தங்கை ஆயிஷா பீவி 45, அவரது 17 வயது மகனுடன் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது ஜலீல் ரகுமான், ஆயிஷா பீவி தங்கள் மீது பெட்ரோலை ஊற்றினர். உடன் வந்திருந்த சிறுவர்கள் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றினர். அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி மீட்டனர்.
இதை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் சிறுவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக ஜலீல் ரகுமான், ஆயிஷா பீவிவை கைது செய்த னர்.
