/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கேபிள் குழி தோண்டியதில் குடிநீர் குழாய் உடைப்பு
/
கேபிள் குழி தோண்டியதில் குடிநீர் குழாய் உடைப்பு
ADDED : பிப் 03, 2024 05:55 AM
திருவாடானை, : மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கேபிள் பதிக்க குழி தோண்டிய போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால் கிராமங்களுக்கு நீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கேபிள் பதிக்கும் போது குடிநீர் குழாய் சேதடைந்தது. இதனால் திருவாடானை, பண்ணவயல், கோடனுார், பாண்டுகுடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் செல்லவில்லை. அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இது போன்ற பணிகள் நடக்கும் போது எந்த இடங்கள் வழியாக குடிநீர் குழாய் செல்கிறது என்பதை குடிநீர் வடிகால் வாரிய பம்ப் ஆபரேட்டர்கள், கேபிள் பதிக்கும் தொழிலாளர்களிடம் தெரிவித்தால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கேபிள் பதிக்கும் தொழிலாளர்கள் தவறால் பல பகுதி மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவத்தை தவிர்க்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

